May 20, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடி வெள்ளியை அமான் பிளாஸ்தின் ஒப்படைப்பதை அனுமதிப்பீர்
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி வெள்ளியை அமான் பிளாஸ்தின் ஒப்படைப்பதை அனுமதிப்பீர்

Share:

ஓர் அரசு சாரா இயக்கமான அமான் பிளாஸ்தின், தாம் வசூல் செய்த ஒரு கோடி வெள்ளி நன்கொடை, பாலஸ்தீன மக்களுக்கு பயன்படுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலினால் காசா வில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கு, எஸ்பிஆர்எம் மினால் முடக்கப்பட்டுள்ள அமான் பிளாஸ்தின் இயக்கத்தின் வங்கி கணக்கு மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

தற்போது குளிர்காலம் ஏற்பட்டுள்ள வேளையில் பாலஸ்தீன மக்களின் அவதி இரட்டிப்பாகும். .இந்நிலையில் தனது அதிகாரிகளின் மேற்பார்வையில் அந்த ஒரு கோடி வெள்ளி நிதி, பாலஸ்தீன மக்களுக்கு ஒப்படைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை எஸ்பிஆர்எம் செய்து கொள்ளலாம் என்றும் முன் மகாதீர் பரிந்துரை செய்துள்ளார்.

ஏற்கனவே பிளாஸ்தின், யாமான், ஷ்ரியா, லெபானோன் போன்ற மக்களுக்கு அமான் பிளாஸ்தின் உதவியிருப்பதையும் துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.

Related News