அடுத்தாண்டு தொடக்கத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
பயனீட்டாளர்கள் குடிநீர்க் கட்டண உயர்வை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பான பரிந்துரையை இவ்வாண்டு இறுதிக்குள்
அமைச்சரவையில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆடுத்த ஆண்டில்
புதிய கட்டண முறை அமலாக்கம் காணும் எனவும்
எதிர்பார்க்கப்படுவதாகவும் இயற்கை வளம், சுற்றுச்சூழல்,
பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் தேசிய நீர் வள மன்றத்துடன்
கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில் நீருக்கானக் கட்டணம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் கோட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த கட்டண உயர்வு சிறிய அளவிலேயே இருக்கும் எனக் கூறிய
அமைச்சர். இதற்குப் பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தப் பின்னர் அனைத்து
மாநிலங்களும் கட்டண உயர்வை அமல்படுத்துமா என்று தெரியவில்லை
என நிக் நஸ்மி சொன்னார்.








