கோலாலம்பூர், அக்டோபர்.24-
கிள்ளான் பள்ளத்தாக்கு கிழக்குப் பகுதியின் புதிய விரைவு நெடுஞ்சாலையான EKVE, செக்ஷன் ஒன்றாவது பிரிவில் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டண விதிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
காஜாங் சுங்கை லோங், பண்டார் மாஹ்கோத்தா செராஸ், உலு லங்காட் மற்றும் அம்பாங் யுகே பெர்டானாவை இணைக்கும் 24 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட முதல் கட்டப் பாதையான EKVE நெடுங்சாலையை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இரண்டு மாத காலம் டோல் கட்டணம், இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு டோல் கட்டண விதிப்பு தொடங்குகிறது என்று East Klang Valley Expressway நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் EKVE Sdn Bhd அறிவித்துள்ளது.








