Sep 30, 2026
Thisaigal NewsYouTube
ஜனவரி முதல் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் கட்டணம் 65 ரிங்கிட்டாக உயர்வு
தற்போதைய செய்திகள்

ஜனவரி முதல் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் கட்டணம் 65 ரிங்கிட்டாக உயர்வு

Share:

கேஎல் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ இடையிலான கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் மற்றும் கேஎல்ஐஏ டிரான்சிட் ரயில் சேவைகளுக்கு பெரியவர்களுக்கான ஒரு வழிக் கட்டணம் வரும் ஜனவரி 1 -ஆம் தேதி முதல் 55 ரிங்கிட்டிலிருந்து 65 ரிங்கிட்டாக உயர்த்தப்படவுள்ளது.

இது குறித்து எக்ஸ்பிரஸ் ரேல் லிங்க் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும், பிற வழித்தடங்களுக்கான கட்டணங்களும் மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சலுகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இஆர்எல் தலைமைச் செயல் அதிகாரி நூர்மா நூர் கூறுகையில், சேவை தரத்தை, தொடர்ந்து பராமரிப்பதுடன், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான முதலீடுகளுக்கும் இந்த கட்டண உயர்வு உதவும் என்றார்.

மேலும், ஜனவரி முதல் பல்வேறு கூட்டாளர்களுடன் இணைந்து 30 விழுக்காடு வரை சிறப்பு டிக்கெட் தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதன் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இஆர்எல், நகர மையத்திலிருந்து கேஎல்ஐஏ முனையம் 1 மற்றும் முனையம் 2 வரை கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் மற்றும் கேஎல்ஐஏ டிரான்சிட் ரயில் சேவைகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜனவரி முதல் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் கட்டணம் 65 ரிங்கிட்டாக உயர்வு | Thisaigal News