Mar 25, 2026
Thisaigal NewsYouTube
இளைஞர் மரணம், இதர நான்கு நண்பர்கள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

இளைஞர் மரணம், இதர நான்கு நண்பர்கள் படுகாயம்

Share:

திரங்கானு,ஜூலை 27-

ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிள்களில் பயணித்த அவரின் நான்கு நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 11.20 மணியளவில் கிழக்கு கரையோர நெடுஞ்சாலையான Lebuhraya pantai Timur Dua- வில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் திரெங்கானு, Marang, Binjal Rendah- வை சேர்ந்த 19 வயது Iqbal Jus Aidil Zaims Sharief என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் 17 க்கும் 19 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவரின் நண்பர்கள் படுகாயத்திற்கு ஆளாகி Dungun மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு Honda Jazz வாகனம் மற்றும் Perodua Alza கார் ஆகியவை சம்பந்தப்பட்டு இருந்ததாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் Maizura Abdul Kadir தெரிவித்தார்.

Related News