Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஒழுக்கக்கேடான செயல்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் 201 ஆண்கள் கைது: ஸாலிஹா முஸ்தஃபா அதிர்ச்சி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒழுக்கக்கேடான செயல்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் 201 ஆண்கள் கைது: ஸாலிஹா முஸ்தஃபா அதிர்ச்சி!

கோலாலம்பூர், நவம்பர்.30-

தலைநகரில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 201 ஆண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார். ஒழுக்கமற்ற, பிறழ்ந்த செயல்களைக் கட்டுப்படுத்த, தொடர்ச்சியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து அவர் தெரிவிக்கையில், "இது மிகவும் அதிர்ச்சிகரமானது என்பதில் சந்தேகமில்லை; இது ஒழுக்கமற்றச் செயல். இதைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியான, முறையான கண்காணிப்பு தேவை," என்று கூறினார்.

மேலும், இந்தக் கைது நடவடிக்கை தொடக்கக் கட்ட நடவடிக்கை என்றும், இதனைத் தொடர்ந்து காவற்படையும் பிற அமைப்புகளும் அடங்கிய 'KL Strike Force' உடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண விரிவான, பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளைத் தடுப்பதில் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் இணைந்து செயல்படுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்