Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 79 பள்ளிகள், தங்கும் விடுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 79 பள்ளிகள், தங்கும் விடுதிகளில் காவல்துறை திடீர் ஆய்வு!

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.27-

மாணவர்களின் பாதுகாப்பையும், ஒழுக்கத்தையும் உறுதிச் செய்யும் நோக்கில், சிலாங்கூர் மாநில போலீசார் கடந்த மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள 79 பள்ளிகள் மற்றும் விடுதிகளில் திடீர் ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

மாணவர்களின் தவறுகள் மற்றும் ஒழுக்கக்கேடுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன என்று மாநில காவல்துறைத் துணைத் தலைவர் முகமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்துள்ளார்.

இம்முயற்சி தொடர்ந்து நடைபெறும் நிலையில், தேவை ஏற்பட்டால் மாணவர்களின் கைப்பேசிகளும் சோதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஆசிரியர்களின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்றும் முகமட் ஸைனி வலியுறுத்தியுள்ளார்.

Related News