Oct 14, 2026
Thisaigal NewsYouTube

சொஸ்மா கைதிகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் - அரசாங்கம் பரிசீலனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.19-

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சு பரிசீலனை செய்து வருகிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா கைதிகள் தொடர்பான விவகாரங்கள், அவர்களின் வழக்குகள் உட்பட அந்த பாதுகாப்பு சட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் அந்த சிறப்பு நீதிமன்றம் கையாளுவதற்கு ஏதுவாக இந்த உத்தேசப் பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சைபுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றம் தோற்றுவிக்கப்படுவது மூலம், சொஸ்மா கைதிகள், தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீண்ட நாள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட முடியும் என்று அமைச்சர் விளக்கினார்.

சொஸ்மாவின் சில சட்டவிதிகளை மீள்பார்வை செய்யும் நடவடிக்கைகளில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் உத்தேசப் பரிந்துரையும் ஒன்றாகும் என்று சைபுடின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்