ஜார்ஜ்டவுன், ஜூலை.18-
கடந்த மாதம் பினாங்கு, தாசெக் குளுகோரில் மூன்று வீடுகள் தீயிடப்பட்ட நாச வேலைக்குத் தாங்கள் கையாட்களாகச் செயல்பட்டதை பிடிப்பட்ட இரண்டு ஆடவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள இரண்டு சந்தேகப் பேர்வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இது தொடர்பாக வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் இரு கையாட்களைக் கூலிக்கு அமர்த்தியுள்ள அந்த இரண்டு வட்டி முதலைகளின் பின்னணியையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக அவர் விளக்கினார்.








