Oct 3, 2026
Thisaigal NewsYouTube

ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பிரஜை மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பிரஜை மரணம்

கோலாலம்பூர், நவம்பர்.07-

இலங்கை பிரஜை ஒருவர், ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலையில் கோலாலம்பூர், செந்தூல், முத்தியாரா செந்தூல் கொண்டோமினியம் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.

அற்றைக்கூலி தொழிலாளரான இலங்கையைச் சேர்ந்த 26 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார். அவரின் உடல் அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் இரண்டாவது மாடியில் நீச்சல் குளம் அருகில் கிடந்தது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சுகார்னோ ஸஹாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் காலை 8.40 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றனர். அந்த நபர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, குற்றவியல் தன்மையிலான அம்சங்கள் இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனைத் திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக அஹ்மாட் சுகார்னோ குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →