தற்போது நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையைத் தொடர்ந்து, உயர் கல்வி நிறுவனங்கள் தங்களின் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உயர் கல்வி அமைச்சு தடைவிதிக்க வில்லை என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நூர்டின் தெரிவித்துள்ளார்.
வெப்ப நிலை உச்சத்தில் இருக்குமானால், உயர்கல்வி நிறுவனங்களில் வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவுறுத்தப்படும். ஆனால், கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் கட்டிடத்திற்குள் மேற்கொள்ளப்படுவதனால் அவற்றில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்று முகமது காலிட் விளக்கினார்.
மேலும், விளையாட்டு நடவடிக்கைகள் தற்போதைய வானிலையைப் பொறுத்தே நடைபெறும் வேளையில், வெப்ப நிலை மோசமாகும் வரை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு, எந்த தடையும் இல்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


