Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளி சிறுவன் விபத்தில் உயிர் இழந்தார்
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி சிறுவன் விபத்தில் உயிர் இழந்தார்

Share:

ஜொகூர், குளுவாங், ஜாலான் செலர் தமன் இல்ஹாம் சாலையில் நேற்றிரவு இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் உயிர் இழந்ததுடன் அவனது தாயாரும், மூத்த சகோதரரும் படுங்காயத்திற்கு உள்ளாகினர்.

கடும் காயங்களுக்கு ஆளாகிய 5 வயது சிறுவன் நோர் ரஹில் ரைஹான் முகமது ஷாருல் சிகிச்சை பலனின்றி குளுவாங் என்சே' பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கம்போங் பாயா விலிருந்து தாமான் இல்ஹாம் மிற்கு தன் இரு பிள்ளைகளுடன் நாசா ரியா ரக காரில் சென்ற மாது, வேக கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் வீரா ரக காரில் மோதியதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இவ்விபத்தில் 34 வயதுடைய ஆயிஷா முகமது சலே என்ற அந்த மாதுவும், அவரின் எட்டு வயது மூத்த மகன் நோர் இசுல் இஸ்லாம் முகமது ஷாருலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி மரு​த்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏசிபி பஹ்ரின் முகமது நோ குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்