Sep 10, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் மூத்த அம்னோ தலைவர்கள் கைதா?– எஸ்பிஆர்எம் மறுப்பு
தற்போதைய செய்திகள்

அம்னோ பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின் மூத்த அம்னோ தலைவர்கள் கைதா?– எஸ்பிஆர்எம் மறுப்பு

Share:

2026-ஆம் ஆண்டு அம்னோ பொதுக்குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், மேலும் சில மூத்த அம்னோ தலைவர்கள் கைது செய்யப்படலாம் என பரவி வரும் தகவல்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்துள்ளது.

அடுத்த வாரம் எந்தவொரு மூத்த அம்னோ தலைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவோ? கைது செய்யவோ? எஸ்பிஆர்எம் திட்டமிடவில்லை என அதன் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊகங்கள் மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நம்புவதற்கு முன்பு, அவற்றை எஸ்பிஆர்எம்மிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, 2026 அம்னோ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கட்சியின் முக்கிய பதவி வகிக்கும் மற்றொரு மூத்த தலைவர் ஒருவர் எஸ்பிஆர்எம்மால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்தன.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான அம்னோ பொதுக்குழுக் கூட்டம் நேற்று செப்டம்பர் 9 -ஆம் தேதி தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

மார்ச்சில் மலேசியாவை வாட்டி எடுக்கப் போகும் சூப்பர் எல் நினோ - மெட்மலேசியா எச்சரிக்கை

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

இந்திய சமூக மேம்பாட்டுக்காக 59.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 7 புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது

பந்திங்கில் விவசாயி சுட்டுக் கொலை: 20 வயது இளைஞர் கைது

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது

நிபோங் திபால் கழிவுநீர் தொட்டியில் ஆண் சடலம்: 5 மியன்மார் நாட்டவர்கள் கைது

கோலாலம்பூரில் 2.91 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: 12 சாட்சிகளிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூரில் 2.91 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: 12 சாட்சிகளிடம் போலீஸ் விசாரணை

லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்து – மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எம்எம்எ வலியுறுத்தல்

லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்து – மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எம்எம்எ வலியுறுத்தல்