மாநிலத் தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் சனிக்கிழமையன்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை 19 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கள் சொந்த கிராமங்களுக்கு அல்லது வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள், வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிட நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண நாட்களை விட ஆகஸ்ட் 11 முதல் 12 வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அதிக நேரம் பயணிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப் படுவதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை பராமரிக்கும் பிலஸ் நிறுவனத்தின் மூத்தப் பொது மேலாளர் முகமட் யூசுப் அப்துல் அஜிஸ் கூறினார்.
இருப்பினும், பொது மக்களின் பயணம் வசதியாக அமைந்திருப்பதை உறுதி செய்வதற்கு உதவும் பொருட்டு டோல் சாவடிகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளில் ஓய்வு இடங்களையும், இதர வசதிகளையும் உள்ளடக்கிய முன்னேற்பாடுகளைச் பிலஸ் நிறுனம் செய்துள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


