Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்கட்சியாக அமரத் தயார் -  ஜலாலுதீன் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்கட்சியாக அமரத் தயார் - ஜலாலுதீன் அறிவிப்பு

Share:

தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சியாக அமரத் தயாராக இருப்பதாக நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு அரசியல் ஆதாயத்திற்காக அல்ல என்றும், கொள்கை மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண், மேற்கொள்ளும் தவறுகளை கண்காணிக்க வேண்டுமெனில், மாநில அரசாங்கமாகத் தொடர்வதற்குப் பதிலாக, எதிர்க்கட்சியாக அமரவும் தயார் என்றும் ஜலாலுதீன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில், பதவிக்காகவோ அல்லது கட்சியின் முன்னேற்றத்தை பாதிக்கச் செய்யவோ இதனைச் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சில கொள்கைகள் சமரசம் செய்ய முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்களது முடிவுகள் அனைத்தும் விற்கவோ வாங்கவோ முடியாத புனிதமான வாக்குறுதிகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்றும் ஜலாலுதீன், இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோவின் 80-ஆம் ஆண்டு விழாவில் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

Related News