Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நலன் சார்ந்த முரண்பாடுகள் இல்லை
தற்போதைய செய்திகள்

நலன் சார்ந்த முரண்பாடுகள் இல்லை

Share:

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலாகாக்களில் அவர்களின் நலன் சார்ந்த முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவதை மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும், துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ வும் மறுத்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் சொத்துடைமை மேம்பாட்டாளரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான எ​ஸ். சுந்தரராஜுவிற்கு வீடமைப்புத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரு முக்கிய துறைகள் வழங்கப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் விளக்கம் அளிக்கையில் சௌ கோன் இயோவ் இதனை தெரிவித்தார். வீடமைப்புத்துறையும், சுற்றுச்​சூழல் துறையும் ஒரே நபருக்கு எவ்வாறு வழங்க முடியும் என்றும்,அவ்விரு துறைகளும் ஒரே நபருக்கு வழங்கப்பட்டதாக வரலாறுகள் இல்லாத நிலையில் அப்பொறுப்புகள் சுந்தராஜு​விற்கு வழங்கப்பட்டு இருப்பது தார்​மீக நெறிமுறைகளுக்கு முரணானதாகும் என்றும் பலர் வாதிட்டு வருகின்றனர்.

Related News