Jul 1, 2026
Thisaigal NewsYouTube
KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

Share:

மலேசியாவில் வார நாட்களில் இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.

இந்த தள்ளுபடியானது, KTMB நிறுவனத்தின் அனைத்து மின்சார இரயில் சேவைகளான ETS மற்றும் ERT சேவையில், ஜேபி சென்ட்ரல் முதல் தும்பாட் வரையில் உள்ள வழித்தடத்திற்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த சலுகையானது, திங்கள் முதல் வியாழன் வரை பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்த ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பான, வசதியான மற்றும் திறன்மிக்க ரயில் சேவையை வழங்குவதை மடாணி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையானது, மலேசியர்களின் முதன்மை போக்குவரத்தாக இரயில் பயணத்தை மாற்றும் அரசின் உறுதிப்பாட்டுடன் இணங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News