Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு
தற்போதைய செய்திகள்

கெந்திங் ஹைலேண்ட்ஸில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளா? சமூக ஊடகங்களில் பரவிய செய்திக்கு போலீஸ் மறுப்பு

Share:

மலேசியாவின் பிரபல சுற்றுத்தளமான கெந்திங் ஹைலேண்ட்ஸ், பெந்தோங் பகுதியில் பெரிய அளவிலான போதைப்பொருள் கும்பல் ஒன்று தடையின்றி செயல்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை பகாங் மாநில போலீசார் மறுத்துள்ளனர்.

இது குறித்து பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்ரி அக்மர் அயூப் வெளியிட்டுள்ள தகவலில், அந்தப் பகுதியில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக போலீசுக்கு புகார் கிடைத்தால், உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பகாங் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறைத் தலைவர் பதவி மாற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ அஸ்ரி அக்மர் அயூப் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் ஒன்றில் மிகப் பெரிய போதைப்பொருள் கும்பல் ஒன்று கெந்திங் ஹலேண்ட்ஸ் பகுதியில் செயல்பட்டு வருவதாகவும், பலமுறை போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்