Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய நபர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் வங்கி இயந்திரங்கள், கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய நபர் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.17-

ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாலியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் இருந்த தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், பண வைப்பு இயந்திரம் மற்றும் கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்தியதாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், அந்நபரை நேற்று காலை 7.45 மணியளவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஶ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறை நடப்பு தலைவர் விக்டர் கணேசன் கூறுகையில், சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய மண்வெட்டியும், அவரிடமிருந்து 0.9 கிராம் methamphetamine என்ற போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நபர் மீது ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான 6 வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News