Nov 20, 2025
Thisaigal NewsYouTube
லோரி கண்ணாடியை உடைத்து விற்பனை பணியாளர் தாக்கிய சந்தேகப் பேர்வழி கைது
தற்போதைய செய்திகள்

லோரி கண்ணாடியை உடைத்து விற்பனை பணியாளர் தாக்கிய சந்தேகப் பேர்வழி கைது

Share:

ஈப்போ, நவம்பர்.20-

இன்று வியாழக்கிழமை ஈப்போ, ஜாலான் பண்டார் திமாவில் ஒரு கடையில் இறைச்சி வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி, விற்பனைப் பணியாளர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்த சந்தேகப் பேர்வழியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் காலை 11.30 மணியளவில் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரைப் போலீசார் கைது செய்தாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட ஆடவர் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லோரியின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். போலீசாரின் வருகையைக் கண்டு ஜாலான் லாஹாட்டிற்குத் தப்பி ஓடிய அந்த ஆடவர் பின்னர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.

Related News