Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அதிவேக இரயில் திட்டம் மீண்டும் உயிர்பெற வேண்டும் !
தற்போதைய செய்திகள்

அதிவேக இரயில் திட்டம் மீண்டும் உயிர்பெற வேண்டும் !

Share:

கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட, HSR எனப்படும் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் அதிவேக இரயில் திட்டத்தை மீண்டும் உயிர்பெற செய்ய வேண்டும் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இபுராகிம் தெரிவித்தார்.

அத்திட்டம் மறுமலர்ச்சி காணப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அது சார்ந்த சில யோசனைகள் தம் வசம் இருப்பதாகவும் சொன்னார்.

அத்திட்டத்திற்கான நிதி முதலீட்டை. 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் கொடுத்து, அவர்கள் முதலீடு செய்த நிதியை மீண்டும் பெறும் வரையில் அத்திட்டத்தை நடத்துவார்கள். குத்தகை காலாவதியாகும் நிலையில், மீண்டும் அரசாங்கத்திடம் அது ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார் சுல்தான் இபுராகிம்.

அத்திட்டம் முதல் பரிந்துரையின்படி நிலைத்திருந்தால், நிச்சயம் அதன் செலவு பெரிதாகி இருக்காது. ஆனால், நிலையான முடிவு எடுக்கப்படாத நிலையில், அதன் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது என்றார் அவர்.

Related News