தங்கம் பரிசோதனை நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 4 லட்சத்து 45 ஆயிரத்து 815 வெள்ளி ரொக்கப் பணத்தை ம்பிக்கை மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் பெண் குமாஸ்தா மீது 133 குற்றச்சாட்டுகள், பினாங்கு, ஜார்ஜடவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது.
தே யா லியாங் என்ற 41 வயதுடைய அந்த பெண் குமாஸ்தா, நீதிபதி ஷர்மிலா அப்துல் சாமாட் அப்துல் சாமாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த பெண் குமாஸ்தா. கடந்த 2019 க்கும் 2021 க்கும் இடைப்பட்ட ஆண்டில் ஜார்ஜ்டவுன், ஜாலான் சுங்ஙாய் யில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தின் அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 408 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








