Sep 30, 2026
Thisaigal NewsYouTube
பாசிர் கூடாங்கில் லாரியை துரத்திப் பிடித்த போலீசார்
தற்போதைய செய்திகள்

பாசிர் கூடாங்கில் லாரியை துரத்திப் பிடித்த போலீசார்

Share:

ஜோகூர், பாசிர் கூடாங்கில் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் லாரியை போலீசார் துரத்திப் பிடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிஎச்பி பிளேந்தோங் அருகிலுள்ள வர்த்தக வாகன நிறுத்துமிடத்திலிருந்து லாரி திருடப்பட்டதாகவும், அதன் ஓட்டுநர் ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

பாசிர் கூடாங் நெடுஞ்சாலையில் தொடங்கிய துரத்தல், கம்போங் தஞ்சோங் லாங்சாட்டில் சாலை முடிவடைந்த பகுதியில் முடிந்தது. அங்கு லாரியை விட்டுவிட்டு அருகிலுள்ள எண்ணெய் பனைத் தோட்டத்துக்குள் தப்பியோடிய சந்தேக நபரைப் போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின்போது லாரி மோதியதில் சில வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News