சர்க்கரை விநியோகிப்பில் போக்குவரத்து சிக்கலால் தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்க்கரைப் பற்றாக்குறையால் அல்ல என உள்நாட்டு வர்த்தகம்ம் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பினாங்கு மாநில இயக்குநர் எஸ்.ஜெகன் தெரிவித்தார்.
குறிப்பாக, புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் மட்டுமே தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் பினாங்கு மாநிலம் முழுக்க மக்கள் பதற்றப்பட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
சர்க்கரை விநியோகம் வழக்கம் போல் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பப்படும். மேலும், இவ்விவகாரம் குறித்து பேரங்காடி பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து மக்களுக்குச் சரியானத் தகவலைக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.








