Feb 10, 2026
Thisaigal NewsYouTube
சிபுவில் சோகம்: சிமெண்ட் லாரி மோதி பிக்அப் வண்டி  நசுங்கியதில் 60 வயது முதியவர் பலி
தற்போதைய செய்திகள்

சிபுவில் சோகம்: சிமெண்ட் லாரி மோதி பிக்அப் வண்டி நசுங்கியதில் 60 வயது முதியவர் பலி

Share:

சிபு, பிப்ரவரி.10-

சரவாக், சிபு, Jalan Deshon- னில் இன்று மதியம் நடந்த சாலை விபத்தில், சிமெண்ட் லாரி ஒன்று பிக்அப் வண்டி மீது மோதி நசுக்கியதில் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் SMK Rosli Dhoby இடைநிலைப்பள்ளி அருகே நண்பகல் 12 மணியளவில் நடந்ததாக சிபு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் Andy Alie தெரிவித்தார். தகவலறிந்ததும் சுங்கை மேரா தீயணைப்பு நிலையத்திலிருந்து எட்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

"ஆரம்பத்தில் ஏர்பேக் கருவிகளைப் பயன்படுத்தி வாகனத்தில் சிக்கியிருந்தவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது" என்று கூறிய Andy Alie, , பின்னர் இரண்டு கிரேன்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதிச் செய்தனர்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிபு மாவட்ட போலீஸ் தலைவர் Zulkipli Suhaili தெரிவித்தார்.

Related News