Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மாது கடுமையான காயங்களுக்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

மாது கடுமையான காயங்களுக்கு ஆளானார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 -

கட்டடம் ஒன்றில் கார் நிறுத்தம் இடத்தில் முதலாவது மாடியில் கார் ஒன்று, சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்ததில் மாது ஒருவர் கடுமையான காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.05 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் பி.ரம்லி யில் நிகழ்ந்தது. தலைக்குப்புற கிடந்த காரின் இடிபாடுகளுங்கு இடையில் சிக்கிக்கிடந்த அந்த மாது, அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டார்.

கழுத்து முறிவு ஏற்பட்டு, சுயநினைவின்றி கிடந்த அந்த மாது பின்னர் இ.ம்.ர்.ஸ் வண்டியின் மூலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த மாது காரை பின்னோக்கி எடுக்கும் போது, அதிவேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி, உடைத்துக்கொண்டு கீழே விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது