கும்பல் ஒன்றினால் மிக கொடூரமாக பகடிவதை செய்யப்பட்டு, தலைக்கவசத்தனால் அடித்துக் கொல்லப்பட்ட தமது மகன் நவீனுக்கு நீதிக் கிடைக்கவில்லை என்றால் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அந்த மாணவனின் தாயார் சாந்தி துரைராஜ் அறிவித்துள்ளார்.
தமது மகன் நவீனுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது. ஆனால், தப்பித்து விட்டார்கள். பினாங்கு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்தை சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமது மகனுக்கு நீதி கிடைப்பதற்காக உண்ணாப் போராட்டத்தை முன்னெடுக்கவும் மனோரீதியாக தம்மை தயார் படுத்திக் கொண்டு வருவதாக சாந்தி குறிப்பிட்டுள்ளார்.








