Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கணவன், மனைவி சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணவன், மனைவி சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா,ஆகஸ்ட் 29-

11 ஆண்டுகளுக்கு முன்பு, சொத்துக்களை மாற்றுவதற்காக போலி ஆவணங்களை பயன்படுத்திய குற்றத்திற்காக வழக்கறிஞர் ஒருவருக்கும், அவரின் மனைவிக்கும் விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத்தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

ஒரு வழக்கறிஞரான 66 வயது டி.பிர் சிங் மற்றும் அவரின் 62 வயது மனைவி கே. பர்மிந்தர் கவுர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று அந்த சீக்கியத் தம்பதியர் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி சூ கஹ் சிங் தள்ளுபடி செய்தார்.

அந்த சீக்கியத் தம்பதியருக்கு ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தவொரு குறைப்பாட்டையும் காண முடியவில்லை என்று நீதிபதி சூ கஹ் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்னார். கடந்த 2013 ஆம் ஆண்டு கோம்பாக் ,புக்கிட் பெர்மாட்டா-வில் உள்ள ஒரு நிலத்தை பெயர் மாற்றம் செய்வதில் போலீ பத்திரங்களை பயன்படுத்தியாக கணவனும் மனைவியும் குற்றங்சாட்டப்பட்டிருந்தனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்..

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →