மலாக்கா மாநிலம் சிம்பாங் அம்பாட் பகுதியில் 38 வயது பெண் ஒருவர், தனது வருங்கால கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நேற்று இரவு முதல் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால், இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது, அவர் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டுள்ளார்.
இது குறித்து அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் கூறுகையில், தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அந்த 38 வயது நபர், வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அப்பெண் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்ததாகவும் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.








