Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சம்மன்களுக்கான அபராதத்தொகை குறைப்பு, நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சம்மன்களுக்கான அபராதத்தொகை குறைப்பு, நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்

நவ.22-

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் வார இறுதியில் நடைபெறும் ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை அபராதத் கழிவு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நகர்ப்புறங்களிலிருந்து சற்று ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்கின்ற மக்களும் இந்த சலுகையை அனுபவிக்கும் பொருட்டு, சம்மன்களுக்கான அபராத கட்டணக் கழிவை, நாடு முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தவிருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துத்துறை அமலாக்க மற்றும் புலன் விசாரணை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹஸான் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த கட்டண கழிவு சலுகையில் எவ்வளவு தொகை கட்டண கழிவாக வழங்கப்படுவது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →