Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மற்றொரு இயக்குநரை எஸ்.பி.ஆர்.எம். கைது செய்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மற்றொரு இயக்குநரை எஸ்.பி.ஆர்.எம். கைது செய்தது

ஷா ஆலாம், நவ.13-


அந்நியத் தொழிலாளர்களை வரழைக்கும் கோட்டா முறை விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை வழங்கி மோசடி செய்தது தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மற்றொரு இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

11 லட்சம் வெள்ளி பெறமானமுள்ள அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கோட்டா முறைக்கு மனித வள அமைச்சின் அங்கீகாரத்தை பெறுவதற்கு பொய்யான தகவல்கள் மற்றும் ஆவணங்களை அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது..

விசாரணைக்கு ஏதுவாக அந்த பெண் இயக்குநர், தடுத்து வைக்கப்படுவதற்கு இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்பு ஆணையை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →