May 24, 2026
Thisaigal NewsYouTube
அந்தப் பணத்தை அரசாங்கம் செலுத்தவில்லை
தற்போதைய செய்திகள்

அந்தப் பணத்தை அரசாங்கம் செலுத்தவில்லை

Share:

கிளாந்தான், ஆகஸ்ட் 12-

கிளந்தன், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அம்னோ பயன்படுத்திய ஹெலிகாப்டருக்கு அரசாங்கம் பணம் செலுத்தவில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பணம் அல்லது அதற்கு சொந்தமானது அல்லாத ஹெலிகாப்படர் சேவையை யாரும், எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியும். எனவே அந்த ஹெலிகாப்படர் சேவைக்கு அரசாங்கப் பணம் கொடுக்கவில்லை என்று துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

அந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாரிசான் நேஷனல், ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தி வருவது தொடர்பில்நெங்கிரி சட்டமன்றத்தொகுதியின் பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநரான அன்னுார் மூசா கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பில் அகமட் ஜாஹிட் பதில் அளித்துள்ளார்.

Related News

அந்தப் பணத்தை அரசாங்கம் செலுத்தவில்லை | Thisaigal News