லங்காவி, நவம்பர்.11-
மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் கடலில் மூழ்கியவர்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நேற்று திங்கட்கிழமை, மேலும் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
100 புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டிருந்த அப்படகில், இதுவரை, 13 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
கடல் சீற்றம் காரணமாக நேற்று இரவு 7.30 மணியோடு தேடுதல் பணிகள் நிறைவு பெற்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் துவங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








