Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெர்னாமாவின் புதிய தலைமை ஆசிரியராக ஒரு பெண் நியமனம்
தற்போதைய செய்திகள்

பெர்னாமாவின் புதிய தலைமை ஆசிரியராக ஒரு பெண் நியமனம்

Share:

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் புதிய தலைமை ஆசிரியராக நூர் - யூ.எல் அஃபிடா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

கடந்த 1967 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பெர்னாமாவில் பெண் ஒருவர், தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றது இதுவே முதல்முறையாகும். அந்த வரலாற்றுப் பதிவை 56 வயதான நூர் - யூ.எல் அஃபிடா பெற்றுள்ளார்.

நூர் - யூ.எல் அஃபிடா பத்திரிகைத் துறையில பரந்த அனுபவத்தை பெற்றவர் ஆவார். கடந்த ஜுன் மாதம் முதல் பெர்னாமாவின் துணை தலைமை ஆசிரியர் பதவியை அவர் ஏற்றார்.

அதற்கு முன்னதாக தேசிய செய்தி நிறுவனத்தில் அவர் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார்.

Related News