Aug 12, 2026
Thisaigal NewsYouTube
நாட்டிற்குள் நுழைய முயற்சி:  112 அந்நிய நாட்டவர்கள் தடுக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

நாட்டிற்குள் நுழைய முயற்சி: 112 அந்நிய நாட்டவர்கள் தடுக்கப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், மே.20-

நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாக நம்பப்படும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 112 பேர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டனர்.

குடிநுழைவுத்துறை நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் அந்த 112 பேர், விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு, தங்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மலேசிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியப் பின்னர், குடிநுழைவுத்துறைச் சோதனைக்கு உட்படாமல் விமான நிலையத்திற்குள்ளேயே சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் சுற்றித் திரிந்தது, ரகசிய கேமராவில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மலேசிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியின் அமலாக்க அதிகாரிகள், விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த சுமார் 300 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை செய்ததில் இந்த 112 பேர் பிடிபட்டதாக அந்த இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

நாட்டிற்குள் நுழைய முயற்சி: 112 அந்நிய நாட்டவர்கள் தடுக்... | Thisaigal News