Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மார்ச் 1 ஆம் தேதி முதல் பினாங்கில் நெகிழிப்பைகள் இல்லாத பிரச்சாரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜார்ஜ்டவுன், பிப்.19-

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் நெகிழிப்பைகள் இல்லாத பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

அதேவேளையில் பினாங்கு மாநிலம் முழுவதும் மறுபயன்பாட்டுப் பைகளை இலவசமாக விநியோகிக்கும் பிரச்சாரமும் தொடங்கப்படும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

இவ்வாறு செய்வது மூலம் மாநில மக்களிடையே மறுபயன்பட்டுக்குரிய பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும். அத்துடன் மக்களும் ஒரு நிலையான நடைமுறைககளுக்கு மாறுவதற்கு உதவிட முடியும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

தங்களின் அன்றாட வாழ்வியல் போக்கில் நெகிழிப்பை இல்லாத நடைமுறைக்கு மக்கள் தங்களை உட்படுத்திக் கொள்வதற்கு மார்ச் முதல் தேதியிலிருந்து வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 6 மாதம் கால அவகாசம் வழங்கப்படும். வரும் செப்டம்பர் முதல் தேதி பினாங்கில் நெகிழிப்பை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் அமலாக்கம் நடைமுறைக்கு வரும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

பினாங்கில் Swettenham Pier Cruise உல்லாச கப்பல் முனையத்தில் 2025 ஆம் ஆண்டில் பினாங்கில் ஒவ்வொரு நாளும் நெகிழிப்பை இல்லாத பிரச்சாரம் எனும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை