ஷா ஆலாம், அக்டோபர்.12-
சிலாங்கூரில் நிலம், வீட்டுரிமை, வணிக இடங்களை வாங்குவதற்கு மலாய் மொழியைச் சரளமாகப் பேசும் திறன் முக்கிய அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலேசிய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள 'மலாய்' என்ற தகுதியைக் கொண்டே நிலம், வீட்டு ஒதுக்கீட்டிற்கான உரிமைகளை சிலாங்கூர் நிர்ணயிக்கும் என்று மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தேசிய மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த முடிவு, நாட்டின் ஒற்றுமையையும் தேசபக்தியையும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். மாநில நிர்வாகத்திலும் பொது இடங்களிலும் மலாய் மொழியின் பயன்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தேசிய மொழியின் மாத விழாவில் மேலும் தெரிவித்தார்.








