கோத்தா திங்கி, நவம்பர்.25-
தொழிற்சாலை பேருந்து ஒன்று, சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உட்பட 11 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில் ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையின் 48 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
75 வயது ஓட்டுநர் செலுத்திய அந்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து இருக்கக்கூடும் என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
காயமுற்ற பேருந்து ஓட்டுநரும், பத்து பயணிகளும் தற்போது கோத்தா திங்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.








