பேரா, கெரிக் அருகில் ஜாலான் கெரிக் - பாலிங் சாலையில் இரண்டு வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் ஒரு சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த வேளையில் 11 பேர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.32 மணியளவில் நிகழ்ந்தது.
மொத்தம் 11 பேர் பயணம் செய்த தொயோத்தா ஹையஸ் மற்றும் பெரோடுவா கெனாரி ஆகிய இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இவ்விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு தீயணைப்பு,மீட்புப்படையினர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தினர். மீட்பு நடவடிக்கை அதிகாலை 5.51 மணியளவில் முடிவடைந்ததாக அதன் முதிர் நிலை அதிகாரி சுல்ஹெல்மி பாஹாரி தெரிவித்தார்.








