Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பீதியில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்
தற்போதைய செய்திகள்

பீதியில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்

Share:

தாங்கள் பயணம் செய்த காரை வழிமறித்து , துவம்சம் செய்த யானைக்கூட்டத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், அந்த பயங்கரச் சம்பவத்திலிருந்து மீள முடியாத அளவிற்கு பீதியில் மூழ்கினர்.

இச்சம்பவம் நேற்று இரவு 7.35 மணியளவில் கிழக்குகரைக்கு செல்லும் வட மேற்கு நெடுஞ்சாலையான ஜாலான் ராயா தைமூர் பராத் டில் ஜெரிக் - ஜெலி சாலையில் 55 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

48 வயதுடைய ஆடவர், தனது குடும்பத்தைச் சேர்ந்த இருவருடன் பினாங்கிலிருந்து திரெங்கானு, ஜெர்திஹ்வை நோக்கி பெரோடுவா ஆக்சியா காரில் சென்று கொண்டிருந்த போது , சாலையோரத்தில் காணப்பட்ட யானை கூட்டத்தின் மத்தியில் குட்டி யானை ஒன்றை எதிர்பாராத விதமாக மோதி விட்டார்.

அடை மழையினால் தெளிவற்ற அந்த காட்டுப்பாதையில் நடந்த இந்த விபத்தினால் மற்ற யானைகள் அந்த பெரோடுவா ஆக்சியா காரை கால்களினால் எட்டி உதைத்து துவம்சம் செய்ய முற்பட்ட வேளையில் அந்த ஆடவர் மிக சாமார்த்தியமாக தமது குடும்ப உறுப்பினர்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதில் அந்த ஆடவருடன் பயணம் செய்த 47 வயதுடைய அவரின் மனைவி மற்றும் 23 வயது மகன் ஆகியோர் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்