சிரம்பான், அக்டோபர்.04-
போலீஸ்காரர்கள் தங்களைத் துரத்திக் கொண்டு வருவதை உணர்ந்து, ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தை வேகமாகச் செலுத்திய கேபள் கம்பிகளைத் திருடிய கும்பல் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் சிரம்பான், ஜாலான் மந்தின் – சிரம்பான் சாலையில் நிகழ்ந்தது. அந்த கும்பலை போலீசாரின் ரோந்துக் கார், ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயில் சாலையிலிருந்து மந்தின் வரை விரட்டிச் சென்றதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹட்டா சே டின் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரு பெரோடுவா அஸியா கார், ஹீனோ ரக லோரி மற்றும் ஃபோர் வீல் டிரைவ் வாகனம் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். இதில் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தின் ஓட்டுநர் தப்பிச் சென்ற வேளையில் காயமுற்ற நிலையில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








