கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவரும் இளையோர்கள், எதிர்வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கிள்ளானில் நடைபெறவுள்ள 'Karnival Kerjaya Selangor 2023' எனும் வேலை வாய்ப்பு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார். காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கிள்ளான் டேவான் ஹம்ஸாவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 7000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிசெய்துள்ளதாக சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழுவின் தலைவரான கணபதி ராவ் தெரிவித்தார்.
அட்ஸ்ரோ, கப்பல் துறைமுகம், வங்கிகள், சேவை நிறுவனங்கள் , உணவு தொழிற்துறை போன்ற 30 துறைகளிலிருந்து நிறுவனங்கள் அந்த நிகழ்ச்சியில் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளதால் இளையோர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.








