Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் பஹாகியா தீ விபத்து: அனைத்து நிவாரண மையங்களும் மூடப்பட்டன
தற்போதைய செய்திகள்

கம்போங் பஹாகியா தீ விபத்து: அனைத்து நிவாரண மையங்களும் மூடப்பட்டன

Share:

சண்டாகான், மே.02-

பத்து சாப்பி, கம்போங் பஹாகியா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட அனைத்து தற்காலிக நிவாரண மையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.

இது குறித்து சண்டாகான் பேரிடர் மேலாண்மை குழு தலைவர் டத்தோ Datuk Walter Kenson கூறுகையில், தீ விபத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்காக மொத்தம் எட்டு நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், 1,900-க்கும் மேற்பட்டோர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த எட்டு மையங்களும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 19 -ஆம் தேதி, ஏற்பட்ட இந்த தீவிபத்தில், மக்கள் அதிகளவில் வசிக்கும் நீர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1,000 வீடுகள் தீயில் அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News