இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்.09-
ஜோகூர், Perling- கிலிருந்து பொந்தியானை நோக்கிச் செல்லும் இரண்டாவது Link நெடுஞ்சாலையின் 19.6 ஆவது கிலோமீட்டரில் கார் ஒன்று தீப்பற்றிக் கொண்டது.
இன்று காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பெரோடுவா மைவி கார் கிட்டத்தட்ட 65 விழுக்காடு சேதமுற்றது. 7 தீயணைப்பு வீரர்களைக் கொண்டு தீக் கட்டுப்படுத்தப்பட்டது. வாகன ஓட்டுநர் உயிர் தப்பிய போதிலும் அவ்வழியே கடந்த மோட்டார் சைக்ளோட்டி ஒருவர் காயமுற்றதாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.








