கோலாலம்பூர், நவம்பர்.22-
நேற்று இரவு, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளின் போது, முறையான உரிமம் இன்றி, புகைப்படச் சேவைகளை வழங்கிய 22 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் குறி வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் சிறப்பு நடவடிக்கையானது போலீசார் மற்றும் தேசிய பதிவிலாகா அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.








