Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளப்பாதிப்புக்கு 4,619 இடங்கள் அடையாளம் காணப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளப்பாதிப்புக்கு 4,619 இடங்கள் அடையாளம் காணப்பட்டன

டிச.5-

நாடு முழுவதும் 4,619 இடங்கள், வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளாக எரிசக்தி மற்றும் நீர்த்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே தயார் நிலையை அதிகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக கால்வாய் அமைப்பைப் பராமரித்தல் மற்றும் சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.

மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையும் முக்கிய ஆறுகளில் 534 வெள்ள எச்சரிக்கை சைரன்கள், சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை அமைப்பை கண்காணித்து வருவதாக துணைப்பிரதமர் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவின் கேள்விக்கு பதில் அளிக்கையில் துணைப்பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →