Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மாதாந்திர அறிக்கை சமர்பிக்க பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

மாதாந்திர அறிக்கை சமர்பிக்க பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன - 8

அமைச்சரவை தலைவர்கள் மற்றும் பொது செயலாளர்கள் (KSU) உள்ளடக்கிய அரசாங்க நிறுவனங்களும் அமைச்சர்களும் தற்போதைய திட்டங்கள் குறித்து மாதாந்திர அறிக்கையை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.

அறிக்கையை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ முஹமாட் சுக்கி அலியிடம் ஒப்படைக்குமாறு இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் அமைச்சர்கள் உடனான மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் அன்வார் கூறினார்.

பொதுவாகவே KSU உடனான கலந்துரையாடலில் ஒதுக்கீடு, கூடுதல் திட்டங்கள் குறித்து கோரிக்கை வழங்கப்படும்.

புதியதாக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் இதுவரையில் மாதாந்திர அறிக்கையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அரசாங்க அமைச்சர்கள் முன்னெடுத்து செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் ஒரு கண்ணோட்டம் இடுவதற்கு மாதாந்திர அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார்.

Related News