Jun 29, 2026
Thisaigal NewsYouTube
டிக் டாக் மூலம் பழகி 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

டிக் டாக் மூலம் பழகி 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.27-

டிக் டாக் சமூக ஊடகத்தின் மூலம் அறிமுகமான 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த திமோர் லெஸ்தே நாட்டைச் சேர்ந்த ஆடவருக்கு கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு பிரம்படிகள் விதித்தது.

30 வயதான Rafinus Bata Tukan என்ற அந்த நபர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அந்த ஆடவருக்கும் டிக் டாக் மூலம் ஒரு மாத காலமே பழக்கம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, அந்தச் சிறுமி சம்பந்தப்பட்ட ஆடவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பிறகு காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.

இன்றைய விசாரணையின் போது குற்றத்தை ஒப்பிய அந்த ஆடவருக்கு நீதிபதி Monica Linsua, 10 ஆண்டுகள் சிறை மற்றும் 2 பிரம்படிகள் விதித்து உத்தரவிட்டார். சிறைத் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்