Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பேரணிக்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரணிக்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை.12-

ஹிம்புனான் துருன் அன்வார் எனும் அன்வாரைப் பதவி இறங்கச் சொல்லும் பேரணி நடைபெறும் வேளையில், அந்தப் பேரைப் நடைபெறுவதற்கான நடைமுறைகளைப் போலீசார் எளிதாக்க வேண்டும் என்று பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் 9 ஆவது பிரிவு, 5 ஆவது ஷரத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அண்மையில் கூட்டரசு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதிப் பேரணி நடைபெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் போலீஸ் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டரசு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் அமைதிப் பேரணி நடத்தப்படுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமை இருக்கிறது. எனவே பொதுமக்களால் நடத்தப்படவிருக்கும் இந்தப் பேரணிக்கு கெடுபிடிகளின்றி போலீஸ் துறை வழிவிட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →