Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா பள்ளிவாசல் பாலியல் பலாத்காரப் புகார் - குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என போலீசார் உறுதி
தற்போதைய செய்திகள்

மலாக்கா பள்ளிவாசல் பாலியல் பலாத்காரப் புகார் - குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என போலீசார் உறுதி

Share:

மலாக்காவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பிணவறையில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவர் அளித்த புகார் தொடர்பான விசாரணை முடிவுற்றுதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

50 வயதான பெண் ஒருவர் நேற்று காலை 9.12 மணியளவில் அளித்த போலீஸ் புகாரில், 48 வயதுடைய ஆண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தபின், அப்பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக அல்லது வற்புறுத்தப்பட்டதாக நிரூபிக்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றச்செயல் தொடர்பான அம்சங்கள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்த போலீசார், விசாரணையை நிறைவு செய்துள்ளனர்.

Related News